முகப்பு...

Wednesday 22 March 2017

அறிந்தும்_அறியாமலும்...


#வாழ்க்கைப்பாதையில்... சிலபல_நேரங்களில்.. நம் இல்லாமையை உணராத இடத்திலும்கூட நம் இருத்தல் அவசியமாகலாம்... :)









































#வாழ்க்கைப்பயணத்தில்.. மனவலிமை படைத்தவரையும் #சிலபல_நேரங்களில் வலுவிழக்கச் செய்யும் சக்தி அன்பின்மீது பூசப்பட்ட அரிதாரத்திற்கு இருக்கலாம். :)

வாழ்க்கைப் பயணத்தில்.. #சிலபல_நேரங்களில்... பேசவேண்டியதை, பேசவேண்டியவரிடம் பேசவேண்டிய நேரத்தில், பேசாது ஒத்திப்போடுவதால் ஒருவேளை பேசமுடியாமலேயே போகநேரிடலாம்... 

Tuesday 21 March 2017

அகரம் எழுதத்துவங்கினேன் மீண்டும்....

ன்புத்தோழமைகளுக்கு, 


ன்பு வணக்கம்.  நீ......ண்ட நாட்களுக்குப் பிறகு உங்களையெல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. குழந்தை கோடு போடும்பொழுதே ரவிவர்மாவின் ஓவியமென தன் குழந்தையினைப் பாராட்டி ஊக்குவிக்கும் அன்னையைப்போல், என் கிறுக்கல்களை படித்து கருத்திட்டு, தவறுகளை அன்புடன் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள உதவி, வாழ்த்தி என்னை ஊக்குவித்து வரும் தங்களுக்கு மனமார்ந்த நன்றியும், அன்பும்.  சில மாதங்களாக பயணத்தில் இருந்ததால் எழுத இயலவில்லை.  கவிச்சிற்பிகளும், கவிப்பேரரசர்களும், கதாசிரியர்களும் வலம் வரும் இந்த வலைத்தளத்தில்,   கலைமகளின் காலடி வணங்கி, மீண்டும் அகரம் எழுதத்துவங்கியிருக்கிறேன்.  தங்களின் தொடர்ந்த வழிகாட்டலோடு...

என்றென்றும் நட்புடன்.,

காயத்ரி வைத்தியநாதன். :)


**********************************


#வாழ்க்கைப்பயணத்தில்
மகிழ்ச்சிப் பெட்டகத்தை
கண்ணெதிரே வைத்து - அதன்
திறவுகோலை
நம் அனுபவத்திடம்
ஒப்படைத்திருக்கலாம் இயற்கை. :)



#வாழ்க்கைப்பாதையில்...
உளப்பூர்வமாக உரையாடியர்கள், உதட்டளவிலான உரையாடலை கடைபிடிக்கையில் அவற்றை விழுங்கி ஜீரணிக்க #சிலபல_நேரங்களில்..
அதீத மனப்பக்குவம் தேவைப்படலாம். :)
#அறிந்தும்_அறியாமலும் ... 

#வாழ்க்கைப்பாதையில்... 
எதிர்பார்ப்புடனேயே பழகி 
எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் இல்லையென்பதால் 
உதறித்தள்ளி செல்வோரை கொண்டாடி...
எதிர்பார்ப்பின்றி பழகுவோரை 
ஏளனமாகக் கருதுவதால்..
எதிர்பார்ப்புடனேயே பழகக் கற்கின்றனரோ..?? :) ;)
#அறிந்தும்_அறியாமலும் ...



*****************



Like
Comment