முகப்பு...

Saturday 1 February 2014

எண்ணச்சிதறல்கள்..!!

தன் உணர்வுகளுக்கு அளிக்கப்படும் மதிப்பு, பிறரின் அன்பை இழக்கச்செய்(கிறது)யும் .
---
கோபமும் வருத்தமும் கூடிப்பேசினால் விளைவு உண்ணாவிரதம் ..
---
அதிகப்படியான சுயபச்சாதாபமும், தற்புகழ்ச்சியும், சுயதம்பட்டமும் சிலநேரம் திணறடிக்கவே செய்கிறது(தே..!!).
--
அன்பானவர்களின் கோபத்தைத்தாங்கும் மனம், அவர்களின் வருத்தமான ஒற்றை சொல்லைக்கூட தாங்க முடிவதில்லை.
                                                                                 --
சற்றே இறுக்கமாக இருக்கும் கணவனை நண்பனே என விளித்து (விளையாட்டாய் சீண்டி) இறுக்கத்தைத் தணித்து சற்றே கோபத்தைத் தூண்டுவதுமாகும்...:)
--
மௌனத்தின் உச்சத்தில் இருப்பவரை பேசவைத்தும், 

பேசியவரை மௌனத்தின் உச்சிக்கு அழைத்துச்செல்லவும் அன்பானவர்களாலேயே முடிகிறது...
---
அந்நியமாய் அருகிலிருப்பதைவிட விரும்பப்பட்டவராக விலகியிருக்கலாம்.
---
விரும்பியவர் வழங்கினாலும், விரும்பி ஏற்றாலும் காயத்திலிருந்து வழியும் குருதி சிகப்பு நிறமாகத்தான் இருக்கும்... :)
--

6 comments:

  1. தன் உணர்வுகளுக்கு அளிக்கப்படும் மதிப்பு, பிறரின் அன்பை இழக்கச்செய்(கிறது)யும் .
    >>
    நச்

    ReplyDelete
  2. "அன்பானவர்களின் கோபத்தைத்தாங்கும் மனம், அவர்களின் வருத்தமான ஒற்றை சொல்லைக்கூட தாங்க முடிவதில்லை".உண்மைதான்

    ReplyDelete
  3. அனைத்தும் சிந்திக்க வைப்பவை! நன்று!

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__