முகப்பு...

Thursday 27 September 2012

விசுவும், நானும்...


ஒரு நகைச்சுவைக்காக முயற்சித்தது.. யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம்அல்ல..
@@@@@@@

காயத்ரி:       திருமண வாழ்க்கை சந்தோஷமா? சங்கடமா......???

விசு      :         சந்தோசம்னு நினைச்சா
                                சங்கடமும் சந்தோசம்.
சங்கடம்னு நினைச்சா
சந்தோசமும் சங்கடம்.

நீங்க
சங்கடத்த 
சங்கடமா நினைக்கிறதும்
சங்கடத்த
சந்தோசமா நினைக்கிறதும்,
சந்தோசத்த 
சந்தோசமா நினைக்கிறதும்
சந்தோசத்த
சங்கடமா நினைக்கிறதும்..
நம்ம நினைப்புலத்தான் இருக்கு..

சங்கடமான சந்தோசம்,
சந்தோசமான சங்கடம்..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சங்கடமா இருந்ததும் இல்ல..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சந்தோசமா இருந்ததும் இல்ல..

காயத்ரி:    ??

விசு    : இப்ப திருமண வாழ்க்கை சங்கடமா..?சந்தோசமா..?முடிவ நீங்களே எடுத்துக்கோங்க..

காயத்ரி   : கொஞ்சம் சங்கடம்போலத்தான் தெரியுது.பாவம்எவ்வளவு
சங்கடப்பட்டிருந்தா,இப்படி ஒரு பதிலை சொல்லியிருப்பீங்க. ஹீம்ம்..
*******




6 comments:

  1. ஹா.. ஹா.. சமீபத்தில் மக்கள் அரங்கம் / அவரின் படம் பார்த்தீர்களோ...?

    பதிவின் தலைப்பிற்கு மேலே உள்ள ஒட்டுப்பட்டையை எடுத்து விடலாமே... சங்கடமா இருக்கு...! ஹா... ஹா...

    ReplyDelete
  2. ஹா ஹா...
    உண்மையில் இது விசு கூறியது போன்றுதான் இருக்கிறது...
    சங்கடமாகவும் இருக்கிறது
    விசுவிடம் உண்மையில் கேட்டு மாட்டிவிட்டீர்களோ

    ReplyDelete
    Replies
    1. ஹாஹ்ஹா..வாங்க தோழர்...அப்படியெல்லாம் இல்லை சும்மா ஒரு கற்பனை..:)

      Delete
  3. ஏற்கனவே உங்களோட பல பதிவுகள்ல விசுவோட பாதிப்பை பார்த்திருக்கிறேன்... என்னடா இது?... விசு டயலாக் மாதிரியே இருக்குதுன்னு நினைச்சிருக்கிறேன்... இப்போ என்னடான்னா நீங்களே விசுவோட பேசுற மாதிரி கற்பனையா ஒரு பதிவை போட்டிருக்கீங்க!!!!! நல்லாத்தாங்க இருக்கு :-)

    ReplyDelete
    Replies
    1. ஹஹ்ஹா...வாங்க தோழர்.. ஒரு முயற்சி..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__