முகப்பு...

Monday 19 December 2011

மரணம்....


திங்களைக் கண்டுறங்கி ..
ஞாயிறைக் காணா உறக்கம் மரணம்..

மீளா உறக்கம் அது மரணம்...

நிரந்தரமில்லா வாழ்க்கைப் பயணத்தில்
நிரந்தரமானது மரணம்..

ஒருவனை மனிதனாக்க.,
ஒருவன் மரணமடைந்து தெய்வமாகிறான்..

அடுத்தவன் மரணத்தைக் கண்டவன்.,
அந்த நேரம் பயந்து..
அடுத்தநாளே ஆட்டமிடுகிறான்..

இடுகாட்டில் வரும் ஞானம்.,
நிலைப்பதில்லையே நம்மிடம்..??

நெருங்கிய உள்ளத்தை.,
நினைவு கோர வைக்கும் மரணம்.

உறவின் ஆழத்தை உணர்த்துவது மரணம்..

நல்லவனுக்கு.,
கூடும் கூட்டமாம் மரணத்தில்..
கெட்டவனுக்கு.,
எட்டுக்கால் கிட்டுவதே அரிது..

உடன் வாரா சொந்தம்..
அந்த உண்மைப் புரியும் மரணத்தில்..

எடுத்துச் செல்ல முடியா
பொருளுக்காய்..
உறவுக்கும் எதிரியாகும் உள்ளம்..

வெறுப்பவரையும் விரும்பவைக்கும்.

மனசாட்சி பேசும் நேரமது.,
மரணப்படுக்கை..

அறுசுவை சுவைத்தவன்...
அரை பிடி அரிசி மட்டும்.,
கடைசி உணவாய்.,
சுவைக்கப்படாமலேயே.

பணம் காசு அறியா இடுகாடு.
பிடி சாம்பலே பரிசாய்...
ஆறடி நிலமே சொந்தம்..
அடுத்த பிணம் வரும் வரை..

வேற்றுமை காணா உலகமாம் இடுகாடு...
வெளியே வந்தவுடன் மறப்பதேனோ..??

விதவிதமாய் உடுத்தியவன்..
வெள்ளைத் துணியோடு...

இருக்கும்போது உணவுக்கு ஏங்கியவனும்.,
இறந்தபின் பல்லக்கில் ஊர்வலம்..

பஞ்சு மெத்தையில் படுத்துறங்கினாலும்,
மீளா உறக்கம் மண்ணில் தானே...??
விரும்புவோரின் மரணத்தையும்.,
வேண்டி நிற்கும் உள்ளம்..

அவன் படுக்கையில் கிடக்கையில்...

ஒரு துளி பாலும் விசமாகும்..
காலனுக்காய் காத்திருக்கையில்..

வீரனையும் கோழையாக்கும்,
கோழையையும் வீரனாக்கும்..

இறந்தபின்னும் உணவளிப்பான்.
அவன்
இடுகாட்டு வெட்டியானுக்கு...

புறச்சூழல் மறந்து.,
கதறி அழவைக்கும் மரணம்..
அழுவதனாலே ஆவதென்ன...??
அறியாதவரா நாம்..?

புறத்தை விடுத்து உள்ளம்.,
அகத்தை அறியத் தூண்டும் மரணம்..
புத்தனது போதிமரமாய்
மனிதனுக்கு இடுகாடு...

நிரந்தரமில்லா இப்பூவுலகில்
நிரந்தரமான மரணத்தை வெறுப்பதேனோ...???



8 comments:

  1. அறுமை தான் வடிவங்ஙள் !!!! மரணத்தை வெறுக்க காரணம் அளவில்லாத ஆசை தான் கண்ணதாசன் சொல்லுவான் " ஆடையின்றி பிறந்தோமே ஆசையின்றி பிறந்தோமா என்று ஆசையுள்ள மனிதன் மரணத்தை எப்படி வரவேற்பான் ? விவேகானந்தர் கூறுவார் " death will be peaceful to a man who removes himself from total bondage

    ReplyDelete
  2. @ஷங்கர்..உண்மைதான் அண்ணா...ஆசை யாரை விட்டது..?அவனவன் ஆசைக்கு ஏற்பவே துன்பத்தையும் அனுபவிக்கிறான்..ரொம்ப நாள் கழித்து வலைப்பதிவிற்கு வந்து உள்ளீர்கள்..தொடர்ந்து உங்கள் கருத்துக்களை வழங்கி குறையிருப்பின் சுட்டிக்காட்டவும்..

    ReplyDelete
  3. ஆயிரம் பேர் சுற்றி இருந்தாலும் மரணத்தில் பயணம் தனிமைதான்...ஆனாலும் எல்லாம் தெரிந்திருந்தும் மனிதன் தன் சௌகரியத்துக்கு அவற்றை மறந்து விட்டு ஆடும் ஆட்டம் இருக்கிறதே...
    கவிதை அருமை காயத்ரி...
    புதுவை ராஜா..

    ReplyDelete
  4. நிரந்தரமில்லாதது வாழ்க்கை, நிரந்தரமானது மரணம் எனத் தெரிந்தும் ஆட்டம் போடுவதுதான் மனிதனின் இயல்பாகிவிட்டது...தங்கள் வருகைக்கு நன்றி தோழமையே..தொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களைப் பகிரவும்...

    ReplyDelete
  5. Death is the only process that takes your body to a place where it ends up, getting buried amidst a lot of strangers, our final neighbours.

    ReplyDelete
  6. @Usman...உஸ்மான் ஜீ உங்கள் வருகைக்கு நன்றி..:)

    ReplyDelete
    Replies
    1. மரணத்தை எண்ணி பயப்படாதவன் எவனும் இல்லை அர்ஜுனன் கூட போர் தொடுக்கும் முன் கண்ணனை பார்த்து கண்ணா என் எதிரில் இருப்பவர்கள் என் மக்கள் இவர்கள் இறப்பிற்கு நான் காரணமாக வேண்டுமா என்று கேட்டான்

      Delete
  7. @சங்கர், நிரந்தரமானது என அறிந்தாலும் பயம் இருக்கத்தான் செய்கிறது...மகிழ்ச்சி அண்ணா தங்கள் வருகைக்கு...:):)

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__