முகப்பு...

Tuesday 25 October 2011

தீபாவளி நோம்பி....




பூலோகத்தில் தீபத் திருநாளாம்..


விண்மீன்களும் வானவில்லும்...
விருந்தினர்களாய்....


வண்ண விளக்குகள்
மரங்களில் கனிகளாய்...


வீடெங்கும் பூமகள்
வண்ணக் கோலங்களாய்...


ஊரெங்கும் பட்டாசுகள் இடிகளாய்
புகை மேகமூட்டமாய் சூழ..


தெருவெல்லாம்  பிரகாசிக்கும்
வண்ண விளக்குகள்
வானத்து நிலவை கூச வைக்க....


நட்சத்திர விடுதியில்
நாளெல்லாம் கொண்டாட்டமாம்


இங்கு நலிந்தோர் வீட்டில்
உணவிற்கு திண்டாட்டமாம்..


சிறுபிஞ்சுகளின் உழைப்பு
தெருவெங்கும் கருகிய காகிதமாய்..


வீட்டில் எஞ்சியது கூட
கொட்டாமல் கொடுத்தால்..
ஏழைக்கு உணவாகும்..

விருந்துக்கு வந்தவர்கள்
விதைத்து விட்டுச்சென்றது.,


வண்ண வண்ண  காகிதங்களும்.
பட்டாசுச் சாம்பலும்
பலவண்ணக் குப்பைகளுமே...


தீபத்திருநாளாம் இன்று...
தீபத்தை ஏற்றியே வழிபடுவது நன்று..

4 comments:

  1. மிகவும் அருமை சகோதரி :)

    ReplyDelete
  2. @ Muthu....தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  3. ஏழை வீட்டிற்கு கல்வி விளக்கேற்றிக் கொண்டாடுங்கள்

    ReplyDelete
  4. நல்ல உணர்வு கலைத்தம்பி...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__